Tuesday, July 27, 2004

அன்புள்ள தங்கைக்கு,

கிரியா ஊக்கிகள் பற்றி கேள்விபட்டிருக்காய் இல்லையா? கிரியா ஊக்கிகள் பலவிதம். சில பேருக்கு தட்டி கொடுத்தால் உத்சாகமாக வேலை செய்வார்கள். சில பேருக்கு " உனக்கு ஒன்றுமே தெரியாது. முட்டாள்; ஜடம் " என்று வைதால்தான் ரோஷம் பிடிக்கும். எனக்கா தெரியாது? இதோ செய்து காட்டுகிறேன் பார் என்று செய்து காட்டுவார்கள். அப்போதான் அவர்களுக்கு தனக்கும் வேலைகளை சரியாக செய்ய வரும் என்கிற தன்னமிக்கை வரும்.
ஒரு சினேகிதர் குடும்பத்தில் பிள்ளைக்கு கல்யாணம் ஆகி மருமகள் வந்தாள். பாவம், பட்டபடிப்பு முடித்தவுடன்; ஏபரலில் பரிட்சை என்றால் ஜூன் மாதம் கல்யாணம் ஆகி வந்தாள். அவர்கள் வீட்டில் அவள்தான் முதல் பெண். புகுந்த வீட்டில் நாலாவது மருமகள். நாத்தனார் ஒருவர். அந்தக் குடும்பத்தினர் ஒருவரையொருவர் கலாட்டா செய்துகொண்டு அதே சமயம் எல்லோரும் வேலைகளைச் செய்வார்கள். மாமனார், மாமியார் ராஜா ராணி போல. இந்த மருமகள் தோசை செய்து போட்டாலும் உடனே தமாஷ் செய்வார்கள். வட்டமாக வரவில்லையே - முறுமுறுவென்று இல்லையே - அடடா தோசைக் கல்லுடன் ஒட்டிகொண்டுவிட்டதா; என்று சிரிப்பார்கள். அவர்கள் வீட்டுப் பெண் அதாவது நாத்தனார் கைவேலைகள் - crafts எல்லாம் - சமையல் உள்பட- நன்றாக செய்வாள். உடனே தர்பாரில் அவளையும் புது மருமகளையும் ஒத்திட்டு பார்ப்பார்கள். இதெல்லாம் புது மருமகளுக்கு கொஞ்ச நாள் வேதனையாகவும் கவலையாகவும் இருந்தது. இதையெப்படி மாற்றுவது என்று யோசனை செய்தாள். கணவனிடம் தனக்கு பொழுது போக்காக கைவேலைசெய்ய சாமான்கள் வாங்கி வரச் சொன்னாள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கைவேலைகளையும் கற்றுக் கொண்டாள். இது எங்கே எப்படி முடிந்தது என்றால் மாமியார் தன் பிள்ளைக்கு செலவு வைப்பதாகவும் கணவன் அனாவசிய செலவு பண்ணுவதாகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவள் குடும்ப பட்ஜெட் பணத்தில் மிச்சம் பிடித்து செலவுகளை சமாளிக்க ஆரம்பித்துவிட்டாள். இது எப்படி இருக்கு?
தட்டிக் கொடுத்து அல்லது புகழ்ந்து வேலை செய்ய வைப்பதுதான் கஷ்டம். பகவானுக்குக் கூட தன்னைப் புகழ்ந்து துதித்தால் பிடிக்கிறது. தினம் ஸ்லோகங்கள் சொல்கிறோமே, அதில் பகவானே உன்னைப் போல - உனகு ஈடு இணை யாரும் இல்லை. உனக்கு தாமரைக் கண்கள்; தாமரைப் பாதங்கள்; என்று வரிசையாக துதி சொகிறோம். மனிதர்களுக்கும் புகழ்ந்தால்தான் பிடிக்கிறது. மாறுபட்டு சொன்னால் கோபம் வருகிறது. ஆனால் பகவானுக்கு கோபம் வராது. அதுதான் வித்தியாசம் !!

மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home